23 June 2025


ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீரர்



நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்ட்டின் கப்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

38 வயதான அவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அவர் தனது 13 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 367 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதில் 198 ஒருநாள் போட்டிகள், 122 டி20 போட்டிகள் மற்றும் 47 டெஸ்ட் போட்டிகளும் உள்ளடங்கும்

(crictimes.lk)