இலங்கையில் முதன்முறையாக நடைபெற்று வரும் லங்கா T10 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (19) மாலை 5:30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
இதில் Jaffna Titans மற்றும் Hambantota Bangla Tigers அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.
போட்டியின் முதல் அரையிறுதியில் Jaffna Titans அணி Hambantota Bangla Tigers அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
பின்னர் இரண்டாவது அரையிறுதியில் Hambantota Bangla Tigers அணி Galle Marvels அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
கடந்த 11ஆம் திகதி தொடங்கிய இந்தப் போட்டியில் 6 அணிகள் பலப்பரீட்சை நடத்தியமை குறிப்பிடத்தக்கது
(crictimes.lk)