29 April 2025


இலங்கைக்கு வந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி



இலங்கையில் நடைபெறும் மகளிர் ஒருநாள் முத்தரப்பு தொடரில் பங்கேற்பதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்று (24) இரவு நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ஏப்ரல் 27 ஆம் திகதி ஆரம்பிக்க உள்ளது.

பகல் நேரப் போட்டிகளாக நடைபெறும் அனைத்து போட்டிகளும் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(crictimes.lk)