04 April 2025


முதல் போட்டியில் வெற்றிபெற்றது RCB



2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் தொடக்க ஆட்டம் நேற்று (22) Royal Challengers Bangalore மற்றும் Kolkata Knight Riders அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.

அங்கு ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸை விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.

கேப்டன் அஜிங்க்யா ரஹானே 56 ரன்களும், சுனில் நரைன் 44 ரன்களும் எடுத்தனர்.

பதில் இன்னிங்சை விளையாடிய பெங்களூரு அணி 16 ஓவர்கள் 2 பந்துகள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

விராட் கோலி ஆட்டமிழக்காமல் 59 ரன்களும், பில் சால்ட் 56 ரன்களும் எடுத்தனர்.

 
(crictimes.lk)