2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்று (25) சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது
சன்ரைசர்ஸ் அணிக்காக இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் பந்துவீசி ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
டெவால்ட் பிரெவிஸின் பிடியெடுப்பை அவர் அற்புதமாக செய்தார், இது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
பதில் இன்னிங்ஸை விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து போட்டியை வென்றது.
சன்ரைசர்ஸை வெற்றிக்கு அழைத்துச் சென்ற கமிந்து மெண்டிஸ் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்
(crictimes.lk)