அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஸ்ஸங்க விலகியுள்ளார்.
அவரது காயம் முழுமையாக குணமடையாத காரணத்தினால் இத்தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.
இதற்கிடையில், சிறிய காயங்களுக்கு ஆளான கமிந்து மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இந்த போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (29) காலியில் ஆரம்பமாக உள்ளது