2025 சாம்பியன்ஸ் தொடர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையில் இன்று (09) நடைபெற உள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்குத்ஆரம்பமாக உள்ளது.
1998 முதல் இந்தியா இரண்டு முறை சாம்பியன்ஸ் தொடரை வென்றுள்ளது.
நியூசிலாந்து அணி ஒரு முறை சாம்பியன்ஸ் தொடரையும் வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி விளையாடிய எந்தப் போட்டியிலும் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(crictimes.lk)