தேசிய சூப்பர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று (30) கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் தம்புள்ளை அணி வெற்றி பெற்றது.
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தம்புள்ளை அணி வெற்றி பெற்றது..
தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸை விளையாடிய கொழும்பு அணி, 76.2 ஓவர்களில் ஆல் அவுட்டாகி, 300 ரன்கள் என்ற மிகப்பெரிய ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
குசல் மெண்டிஸ் 119 ஓட்டங்களையும், லஹிரு மதுசங்க மற்றும் சரித் அஸ்லான் தலா 43 ஓட்டங்களையும் எடுத்தனர்.
தம்புள்ள அணி சார்பாக அகில தனஞ்சய மற்றும் துலாஜ் சமுதித ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தம்புள்ளை அணி, சகல விக்கட்டுகளையும் இழந்து 400 ஓட்டங்களைஎடுத்தது.
இருப்பினும், கொழும்பு அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதன்படி, இந்தப் போட்டியில் தம்புள்ள அணி வெற்றி பெற 133 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அந்த இலக்கை துரத்திய தம்புள்ளை அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
(crictimes.lk)