நியூசிலாந்துக்கு எதிரான T20 தொடருக்கான இலங்கை அணி இன்று (18) இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ளது
இதன்படி சரித் அசங்க தலைமையிலான இலங்கை அணியில் 16 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான டி20 போட்டியின் முதல் போட்டி டிசம்பர் 28ஆம் திகதியும், இரண்டாவது போட்டி டிசம்பர் 30ஆம் திகதியும் நடைபெற உள்ளது.
மேலும், 3வது டி20 போட்டி ஜனவரி 2ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
(crictimes.lk)