10 April 2025


பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் இராஜினாமா



பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேசன் கில்லெஸ்பி இராஜினாமா செய்துள்ளார்.

இதன்படி தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் இணைவதில்லை என அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் செயல் பயிற்சியாளராக அகிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

(crictimes.lk)