இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் 03 வருட கிரிக்கெட் தடை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (11) முதல் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
கடந்த எல்பிஎல் போட்டியின் போது போதைப்பொருள் பாவனை தொடர்பில் தேசிய விளையாட்டு ஒழுக்காற்று குழுவின் முன்னிலையில் நிரோஷன் டிக்வெல்ல அழைக்கப்பட்ட போது, அவர் கொக்கேய்ன் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதன்படி, நிரோஷன் டிக்வெல்லவை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 03 வருடங்களுக்கு தடை செய்ய இலங்கை கிரிக்கெட் சபை கடந்த செப்டெம்பர் மாதம் தீர்மானித்தது.
(crictimes.lk)