10 April 2025


இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது இந்தியா



நேற்று (25) இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் உலக சாம்பியனான இந்தியா இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நாணய சூழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி, போட்டியின் முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

அடிக்க பட்சமாக ஜோஸ் பட்லர் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் முடிவை மாற்றிய திலக் வர்மா, ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்

அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T 20 தொடரில் இந்திய அணி தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

 
(colombotimes.lk)