அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை (26) காலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இந்தப் போட்டியில் நடைபெற்ற 3 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதோடு ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது.
இதேவேளை, தென்னாபிரிக்க அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு போட்டிகளும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும்.
அதன்படி இந்த இரண்டு போட்டிகளின் இறுதி முடிவு இலங்கை அணிக்கும் தீர்க்கமானதாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
எனினும் இலங்கை அணி தற்போது 5வது இடத்தில் உள்ளது.
இதுவரை தென்னாப்பிரிக்க அணி முதலிடத்தையும், ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்தையும், இந்திய அணி மூன்றாம் இடத்தையும், நியூசிலாந்து அணி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
(crictimes.lk)