2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாக உள்ளது.
இலங்கை அணி ஆரம்ப சுற்றில் 5 போட்டிகளில் விளையாட உள்ளது.
அதன்படி, அவர்கள் வரும் 22 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
மும்பையில் நடைபெறும் இந்தப் போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்க உள்ளது.
பின்னர் இலங்கை அணி 26 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவையும், 28 ஆம் திகதி அவுஸ்திரேலியாவையும், மார்ச் 6 ஆம் திகதிமேற்கிந்தியத்தீவுகளையும், மார்ச் 10 ஆம் திகதி இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்ளும்.
2025 சர்வதேச மாஸ்டர் லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்கேற்கும் போட்டிகளின் அட்டவணை பின்வருமாறு:
(crictimes.lk)