இலங்கை T10 கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவருக்கு போட்டி நிர்ணயம் செய்ய பரிந்துரைத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள Galle Marvels அணியின் உரிமையாளர், கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று (18) ஒரு மணிநேரம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.
இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127ஆவது பிரிவின் கீழ் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கத் தயார் என அவர் தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதன்படி இன்று பிரதம நீதவான் திலின கமகே அலுவலகத்தில் அவரது இரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அப்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த பிணை கோரிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி பரிசீலிக்கப்படும் எனவும், அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
(colombotimes.lk)