04 April 2025


CT 2025 | அரையிறுதி அட்டவணை இதோ



2025 சாம்பியன்ஸ் தொடர்  கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப சுற்றில் அனைத்து போட்டிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.

அதன்படி, ஆரம்ப சுற்றின் A  பிரிவில் இருந்து இந்திய அணியும், நியூசிலாந்து அணியும், குரூப் B யில் இருந்து அவுஸ்திரேலிய அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்தப் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி ஆரம்பச் சுற்றில் A குழுவில் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்ற இந்திய அணிக்கும், B குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் நடைபெறவுள்ளது.

மேலும், ஆரம்ப சுற்றில், A பிரிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்ற நியூசிலாந்து அணிக்கும், குரூப் B  பிரிவில் முதலிடத்தைப் பெற்ற தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

முதல் அரையிறுதிப் போட்டி இன்று (04) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மேலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை (05) பாகிஸ்தானின் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

முதல் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால் இறுதிப்போட்டி துபாயில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(crictimes.lk)